ஹந்த்வாரா தீவிரவாத என்கவுன்டரில் வீர மரணம் அடைந்த கர்னல் அசுதோஷ் சர்மாவின் குடும்பத்திற்கு 50 லட்சம் ரூபாய் நிதி வழங்கப்படும் என உத்தர பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் அறிவித்துள்ளார்.
ஜம்மு காஷ்மீரில் கடந்த 2 ஆம் தேதி நடந்த இந்த என்கவுன்டரில் கர்னல் அசுதோஷ் சர்மா உள்ளிட்ட 5 பேர் நாட்டுக்காக உயிர்த்தியாகம் செய்தனர்.
கர்னல் அசுதோஷ் சர்மா உத்தர பிரதேச மாநிலம் புலாந்தஷரை சேர்ந்தவர் ஆவார்.
டுவிட்டரில் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ள யோகி ஆதித்ய நாத், கர்னல் அசுதோஷ் சர்மாவுக்கு அவரது சொந்த கிராமத்தில் நினைவுச் சின்னம் அமைப்பதுடன், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.