ஆந்திரப்பிரதேசத்தில் மது விற்பனைக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளபோதிலும், மது அருந்துபவர்களை கட்டுப்படுத்தும் தடை வரி விதிக்கப்படும் என அம்மாநில அரசு அறிவித்துள்ளது.
மதுக்கடையில் 5 பேருக்கு மேல் நிற்க அனுமதிக்கக் கூடாது, சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும், கூட்டம் கூடினால் கடையை அடைத்துவிட வேண்டும் என்பன உள்ளிட்ட நிபந்தனைகளுடன் ஆந்திராவில் மதுக்கடைகள் திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளது.
முற்பகல் 11 மணி முதல் இரவு 7 மணி வரை கடைகள் திறந்திருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.வருவாயை கருத்தில் கொண்டு மதுக்கடைகளை திறக்க அனுமதித்திருந்தாலும், மது அருந்துவதை கட்டுப்படுத்தும் வகையில் புதிதாக தடை வரி விதிக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.