மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் ஆயிரத்து ஐந்நூறு புள்ளிகளுக்கு மேல் சரிந்தது.
கொரோனா வைரஸ் பரவத் தொடங்கி இந்தியாவில் ஊரடங்கு நடைமுறைப்படுத்திய பின் இந்தியப் பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சியடைந்ததன. கடந்த ஒருவாரமாகப் பங்குச் சந்தையில் ஏற்றமும் இறக்கமும் மாறி மாறிக் காணப்பட்டது.
இந்நிலையில் இன்றைய வணிகநேரத் தொடக்கத்திலேயே பங்குச்சந்தையில் சரிவு ஏற்பட்டது. ஒன்பதரை மணியளவில் மும்பை பங்குச்சந்தை பங்குவிலைக் குறியீடு சென்செக்ஸ் ஆயிரத்து 542 புள்ளிகள் சரிந்து 32 ஆயிரத்து 175 ஆக இருந்தது. தேசியப் பங்குச்சந்தை பங்குவிலைக் குறியீடு நிப்டி 426 புள்ளிகள் சரிந்து ஒன்பதாயிரத்து 434 ஆக இருந்தது. வாகன உற்பத்தி நிறுவனங்கள், உலோகத் தொழில் நிறுவனங்கள் ஆகியவற்றின் பங்குவிலை 9 விழுக்காடு வரை வீழ்ச்சியடைந்தது.