மகாராஷ்ட்ராவில் இன்று முதல் டாக்சிகள், தனிக்கடைகள் இயங்க அனுமதிக்கப்பட்டுள்ளது.
ஒரு தெருவில் அத்தியாவசியப் பொருட்கள் அல்லாத இதர கடைகளில் 5 கடைகள் வீதம் திறக்கலாம் என்று மாநில அரசு அனுமதித்துள்ளது. நாட்டின் மிகவும் பாதிக்கப்பட்ட மாநிலமாக உள்ள மகாராஷ்ட்ராவில் கட்டுப்பாடுகளைத் தளர்த்த அரசு மறுத்துவிட்ட போதும் தொழில் வளர்ச்சிக்காகவும் மக்களின் தேவைக்காகவும் சில தளர்வுகளை அளிக்க முன்வந்துள்ளது. மதுக்கடைகள் இன்று முதல் திறக்கப்படுகின்றன.
பச்சை மற்றும் ஆரஞ்சு மண்டலங்களில் இருசக்கர வாகனங்கள் மற்றும் நான்கு சக்கர வாகனங்களுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது.33 சதவீத ஊழியர்களுடன் தனியார் அலுவலகங்கள் இயங்கவும் அனுமதிக்கப்பட்டுள்ளது.மும்பை, புனே, பிம்ப்ரி, உள்ளிட்ட நகரங்கள் சிவப்பு மண்டலங்களாக உள்ளன.இவற்றில் மத்திய அரசின் வழிகாட்டல்களின்படி முன்பு அறிவிக்கப்பட்ட தடைகள் நீடிக்கும் என்றும் மாநில அரசு அறிவித்துள்ளது.