ஊரடங்கு கட்டுப்பாடுகளைத் தளர்த்த வேண்டிய காலம் வந்துவிட்டதாக டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கேஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், பொது இடங்களில் எச்சில் துப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளார். ஊரடங்கைக் கடைப்பிடிக்க மத்திய அரசு எடுத்த முடிவு முதன்மையானது என்றும், ஊரடங்கை நடைமுறைப்படுத்தி இருக்காவிட்டால் நிலைமை பயங்கரமானதாக ஆகியிருக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு ஏப்ரலில் மூவாயிரத்து ஐந்நூறு கோடி ரூபாயாக இருந்த அரசின் வருவாய் இந்த ஏப்ரலில் முந்நூறு கோடி ரூபாயாகச் சரிந்துவிட்டதாகவும் அரவிந்த் கேஜ்ரிவால் தெரிவித்தார்.