ஊரடங்கு முடிவுக்கு வந்தவுடன் டெல்லி விமான நிலையம் படிப்படியாக செயல்படத் துவங்கும் என தகவல் வெளியாகி உள்ளது.
கொரோனா ஊரடங்கை தொடர்ந்து மார்ச் பிற்பகுதி முதல் உள்நாட்டு, சர்வதேச பயணிகள் விமான சேவைகள் நிறுத்தப்பட்டு விமான நிலையங்கள் வெறிச்சோடிப் போய் உள்ளன. ஊரடங்கு நீட்டிப்பால் வரும் 17 ஆம் தேதி வரை விமான சேவை ரத்தும் நீட்டிக்கப்பட்டுள்ளது.
அதன் பின்னர் டெல்லி விமான நிலையத்தின் 3 ஆம் முனையம் முதற்கட்டமாக திறந்து செயல்படும் என கூறப்படுகிறது. வருகை மற்றும் புறப்பாடு இடங்களில் பயணிகளின் உடைமைகள் மீது அல்ட்ராவயலட் கதிர்கள் பாய்ச்சப்பட்டு கிருமிநாசினி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என கூறப்படுகிறது.