ஜம்மு காஷ்மீரின் ஹந்த்வாராவில், உள்ளூர் மக்களை காக்கும் பணியில் உயிர் தியாகம் செய்த வீரர்கள் 5 பேரும், அதிகபட்ச அர்ப்பணிப்பு உணர்வுடன் நாட்டுக்கு தொண்டாற்றியுள்ளதாக பிரதமர் மோடி கூறி உள்ளார்.
ஹந்த்வாராவில் தீவிரவாதிகளை ஒழிக்கும் பணியின் போது கர்னல் அஷுதோஷ் சர்மா,மேஜர் அனுஜ் சூட் உள்ளிட்ட 4 ராணுவ வீரர்களும், எஸ்.ஐ. சகீல் காஸி என்பவரும் வீர மரணம் அடைந்தனர்.
அவர்களுக்கு டுவிட்டரில் அஞ்சலி செலுத்தி உள்ள மோடி, அவர்களின் தீரத்தையும் தியாகத்தையும் நாடு ஒரு போதும் மறவாது என குறிப்பிட்டுள்ளார். மக்களை காக்க அவர்கள் அயராது பணியாற்றியதாகவும் அவர் தெரிவித்திருக்கிறார். வீர மரணம் அடைந்தவர்களின் குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் மோடி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.