டெல்லியிலுள்ள சிஆர்பிஎப் தலைமையக ஊழியர் ஒருவருக்கு கொரோனா இருப்பது உறுதியாகியிருப்பதால், அந்த அலுவலகம் பூட்டப்பட்டு சீலிடப்பட்டுள்ளது.
டெல்லி லோதி சாலையில் உள்ள சிஜிஓ வளாகத்தில் சிஆர்பிஎப் படைப்பிரிவின் தலைமையகம் செயல்பட்டு வருகிறது. அந்தத் தலைமையகத்தில் பணிபுரிந்த சிஆர்பிஎப் ஊழியர் ஒருவருக்கு கொரோனா நோய் தொற்று இருப்பது மருத்துவ பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனால் சிஆர்பிஎப் படைப்பிரிவு தலைமையகம் பூட்டப்பட்டு சீலிடப்பட்டுள்ளது. கொரோனா நோய் பரவலை தடுக்க அங்கு கிருமி நாசினி தெளிக்கப்படவுள்ளது. இதேபோல் சிஆர்பிஎப் தலைமையகத்துக்கு பிறர் வருவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.