கொரோனா பாதிப்பை கட்டுக்குள் வைத்திருக்கும் நாடான தென்கொரியாவை போல, இந்தியாவிலும் உயிரிழப்பு விகிதிம் மிகக் குறைவாக இருப்பதாக அமெரிக்காவின் ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.
அந்த பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள புள்ளி விவரங்களில், தென்கொரியாவில் பாதிப்பு எண்ணிக்கை 10 ஆயிரத்து 780ஆகவும், பலி எண்ணிக்கை 250ஆகவும் இருப்பதாகவும், இதில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கையுடன் ஒப்பிடுகையில் பலி எண்ணிக்கை வெறும் 2 புள்ளி 3 சதவீதம்தான் எனவும், இந்த அளவானது மக்கள் தொகையில் ஒரு லட்சம் பேருக்கு பூஜ்யம் புள்ளி 48 சதவீதம்தான் எனவும் கூறப்பட்டுள்ளது.
இந்தியாவில் பலி விகிதமானது 3 புள்ளி 3 சதவீதம் எனவும், இது ஒரு லட்சம் மக்கள் தொகையில் பூஜ்யம் புள்ளி பூஜ்யம் 9 சதவீதம்தான் எனவும் ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழக புள்ளி விவரங்கள் கூறுகின்றன.