சொந்த ஊர் திரும்பும் புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் தங்கள் ரயில் கட்டணத்தை செலுத்த வேண்டும் என்று கேரள அரசு அறிவித்துள்ளது.
சுமார் ஏழாயிரம் தொழிலாளர்களுக்கான உணவு செலவை அரசு ஏற்றுக் கொண்டுள்ளது. பீகார், ஒடிசா, ஜார்க்கண்ட் போன்ற மாநிலங்களில் இருந்து வந்த ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் கேரளஅரசிடம் ஊர்திரும்புவதற்காக விண்ணப்பித்துள்ளனர்.
தொழிலாளர்களை அழைத்துச் செல்ல சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த ரயில்களுக்கான இலவச டிக்கட்டுகளை மொத்தமாக மாநில அரசுகளுக்கு ரயில்வே வழங்கும் என்று கூறப்பட்டது. பின்னர் மாநில அரசுகள் கட்டணத்துக்கான தொகையை செலுத்த வேண்டும் என்றும் ரயில்வே நிர்வாகம் தெரிவித்தது. இதனையடுத்து டிக்கட்டுக்கான கட்டணத்தை செலுத்தும்படி புலம்பெயர் தொழிலாளர்களுக்கு கேரள அரசு உத்தரவிட்டது.