ஜன் தன் வங்கிக் கணக்கு வைத்துள்ள சுமார் 2 கோடி பெண்களுக்கு நாளை முதல் அவர்களின் கணக்கில் 500 ரூபாய் செலுத்தப்பட உள்ளது.
முதல் தவணை ஏப்ரல் மாதத்தில் வழங்கப்பட்டது. கடைசித் தவணை ஜூன் மாதம் வழங்கப்படும். கடந்த மார்ச் 26ம் தேதி பிரதமர் மோடியின் ஜன் தன் யோஜனா கணக்கில் பெண்களுக்கு மாதம் 500 வீதம் மூன்று மாதங்களுக்கு வழங்கப்படும் என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்திருந்தார்.
மொத்தம் ஒரு லட்சத்து எழுபதாயிரம் கோடி ரூபாய்க்கான நலத்திட்டங்களை அவர் அப்போது அறிவித்தார். ஏடிஎம்களிலும் வங்கிகளிலும் இந்தப் பணத்தை எடுப்பதற்காக வருபவர்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்குமாறும் மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.