ஊக்குவிப்புத் திட்டங்கள், சலுகைத் திட்டங்களை அறிவிப்பது தொடர்பாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோருடன் பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை நடத்தியுள்ளார்.
கொரோனா பரவலைத் தடுக்கத் தொடர்ந்து 54 நாட்கள் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் தொழில்நிறுவனங்களும் வணிக நிறுவனங்களும் நிதி நெருக்கடியில் சிக்கியுள்ளன. இதேபோல் பொதுமக்களும் வேலையிழப்பு, வருமான இழப்பு ஆகியவற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
பொருளாதாரப் பாதிப்பை ஓரளவு குறைப்பதற்காக ஏற்கெனவே ஒரு லட்சத்து எழுபதாயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான ஊக்குவிப்பு நிதியுதவித் திட்டங்களை மத்திய அரசு அறிவித்துள்ளது.
இந்நிலையில் மீண்டும் நிறுவனங்களுக்கு ஊக்குவிப்புத் திட்டங்கள், பொதுமக்களுக்கு நிதியுதவித் திட்டங்கள் அறிவிப்பது தொடர்பாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோருடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தியுள்ளார்.