மத்திய அரசு இரு நிறுவனங்களிடம் இருந்து 11 கோடியே 45 லட்சம் ஹைட்ராக்சிகுளோரோகுயின் மாத்திரைகளைக் கொள்முதல் செய்வதற்கு ஆர்டர் கொடுத்துள்ளது.
அரசு நிறுவனமான இந்துஸ்தான் லேட்டக்ஸ் லிமிடெட் இந்த மாத்திரைகளைக் கொள்முதல் செய்து அரசுக்கு வழங்கும். இதற்காக ஐபிசிஏ லேபரட்டரீஸ், சைடஸ் கடிலா ஆகிய நிறுவனங்களிடம் மொத்தம் 11 கோடியே 45 லட்சம் மாத்திரைகள் வாங்க எச்எல்எல் ஆர்டர் கொடுத்துள்ளது.
ஆர்டர் கொடுத்ததில் ஏற்கெனவே 6 கோடியே 64 லட்சம் மாத்திரைகள் வந்துள்ளதாகவும், மீதி மாத்திரைகள் வரும் 16ஆம் தேதிக்குள் கிடைத்துவிடும் என்றும் மத்திய அரசின் நலவாழ்வுத்துறை மூத்த அதிகாரி தெரிவித்துள்ளார்.
கொரோனா பாதிப்புக்கு பயன்படுத்தப்படும் இந்த மாத்திரைகளால் பக்க விளைவுகள் ஏற்படும் என்பதால் 12 வயதுக்குக் கீழுள்ள குழந்தைகள், கருவுற்ற மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கு வழங்கப் பரிந்துரைக்கப்படவில்லை என்பது குறிப்பிடத் தக்கது.