உள்நாட்டு மற்றும் சர்வதேச விமான சேவைகளுக்கு விதிக்கப்பட்ட தடையே மே 17ம் தேதி வரை மத்திய அரசு நீட்டித்துள்ளது.
இதுகுறித்து மத்திய விமான போக்குவரத்து இயக்குநரகம் (டிஜிசிஏ) வெளியிட்டுள்ள அறிவிப்பில், கொரோனா பரவலை கட்டுப்படுத்த ஊரடங்கை மே 17ம் தேதி வரை நீட்டித்து மத்திய உள்துறை அமைச்சகம் நேற்று அறிவிப்பு வெளியிட்டிருந்தது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இதை அடிப்படையாகக் கொண்டு, உள்நாட்டு விமான சேவை, சர்வதேச விமான சேவைக்கு இந்தியாவில் விதிக்கப்பட்ட தடை மே 17 வரை நீடிக்கப்படுவதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரத்தில் அனைத்து சர்வதேச சரக்கு விமான போக்குவரத்து சேவை, மத்திய விமான போக்குவரத்து இயக்குநரகத்தால் அனுமதிக்கப்பட்டுள்ள விமானங்களின் சேவைக்கு இந்தத் தடை பொருந்தாது எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.