பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் ஊரடங்கை மீறும் வகையில் சாலையில் நடமாடிய மக்களுக்கு மாலையிட்டு கொரோனா பரவல் குறித்து புதிய முறையில் போலீசார் விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.
லூதியானாவில் இதுவரை கொரோனாவால் 76 பேர் பாதிக்கப்பட்டுள்ளதால், கட்டுப்பாடுகளை போலீசார் தீவிரமாக அமல்படுத்தி வருகின்றனர். இதை பொருட்படுத்தாமல் சாலையில் நடமாடிய மக்களையும், வாகனங்களில் வலம் வந்தோரையும் போலீசார் மடக்கிப் பிடித்தனர்.
அப்போது அவர்களின் கழுத்தில் மாலையிட்டு, வெளியே நடமாடுவது கொரோனாவை நாமே விரும்பி வரவேற்பதற்கு சமம் என்றும், வீடுகளுக்குள்ளேயே இருக்க வேண்டியது அவசியம் என்றும் எடுத்துரைத்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.