ஊரடங்கால் ஏற்பட்டுள்ள பொருளாதார இழப்புகளை ஈடுகட்ட தொழில்துறையினர் மத்திய அரசிடம் 6 லட்சம் கோடி ரூபாய்க்கு உதவி கோருகின்றனர்.
இதற்கான அறிவிப்பை உடனடியாக வெளியிடும்படி இந்திய தொழில் கூட்டமைப்புகள் கோரியுள்ளன.அமைப்பு சார்ந்த தொழில்களிலும் அமைப்பு சாரா தொழில்களிலும் உள்ள பல லட்சம் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் ஊரடங்கு காரணமாக பாதிக்கப்பட்டிருப்பதாகவும் இத்தகைய இழப்பை சமாளிக்க மத்திய அரசு மிகப்பெரிய நிவாரணம் மற்றும் நிதித் திட்டங்களை தொழில்துறையினருக்கு அறிவிக்க வேண்டும் என்றும் அசோசம் அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது