டெல்லி சிறுபான்மையினர் ஆணையத்தின் தலைவர் மீது தேசத்துரோக குற்றச்சாட்டின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
தற்போது அந்த ஆணையத்தின் தலைவராக இருக்கும் ஜாபருல் இஸ்லாம் கான் சமூக ஊடகங்களில் பிரிவினையை ஏற்படுத்தும் வகையில் கருத்து பதிவிட்டதாகக் கூறப்படுகிறது. இந்தக் கருத்துக்கள் சர்ச்சையை ஏற்படுத்தியதால் அவர் மன்னிப்புக் கோரியிருந்தார். இந்நிலையில் கானின் பதிவு குறித்து வந்த புகாரின் அடிப்படையில், அவர் மீது இந்திய தண்டனைச் சட்டம் 124 ஏ மற்றும் 153 ஏ ஆகிய பிரிவுகளின் கீழ் தேசத்துரோகக் குற்றச்சாட்டின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. மேலும் குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக விளக்கம் அளிக்குமாறும் அவருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.