முகக்கவசம் அணியாதவர்களுக்கு பெட்ரோல், ரேஷன் பொருள்கள் இல்லை என கோவா அரசு அறிவித்துள்ளது.
தற்போதைய நிலவரப்படி கொரோனா நோய்த் தொற்று இல்லாத மாநிலமாக கோவா இருந்து வருகிறது. அந்த நிலையை அப்படியே தொடர்ந்து வைத்துக் கொள்ள பல்வேறு விதிமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதுகுறித்து முடிவெடுக்க அம்மாநில தலைமைச் செயலாளர் பரிமள் ராய் தலைமையில் மாநில செயற்குழுக் கூட்டம் நடந்தது.
இந்தக் கூட்டத்தில், வெளியில் வரும்போது முகக்கவசம் அணியாதவர்களுக்கு பெட்ரோல் பம்புகளில் எரிபொருள், நியாய விலைக்கடைகளில் ரேஷன் பொருள்கள் வழங்கப்படாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வெளியே செல்லும்போது முகக்கவசம் அணிய வேண்டும் என்பதும் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்பதும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.