மகாராஷ்டிரத்தில் மண்டலவாரியாக ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும் என முதலமைச்சர் உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிரத்தில் 14 மாவட்டங்கள் சிவப்பு மண்டலத்திலும், 16 மாவட்டங்கள் ஆரஞ்ச் மண்டலத்திலும், 6 மாவட்டங்கள் பசுமை மண்டலத்திலும் உள்ளன.
இந்நிலையில் முதலமைச்சர் வெளியிட்டுள்ள வீடியோவில், கட்டுப்பாடுகள் மிகவும் எச்சரிக்கையுடன் தளர்த்தப்படும் என்றும், அவசரக் கதியில் தளர்த்தப்படாது எனவும் குறிப்பிட்டுள்ளார்.
மும்பை, புனே, நாக்பூர், அவுரங்காபாத்தில் ஊரடங்கு தளர்த்தப்படாது என்றும், பசுமை மண்டலத்தில் படிப்படியாக எச்சரிக்கையுடன் கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும் எனவும் தெரிவித்தார்.
ஊரடங்கால் மக்கள் துன்பப்படுவதை ஒப்புக் கொண்ட அவர், மக்களின் உடல்நலமே உண்மையான செல்வம் எனத் தெரிவித்தார். மக்கள் பாதுகாப்பாக இருந்தால் எல்லாமே நல்லதாக அமையும் எனவும் உத்தவ் தாக்கரே குறிப்பிட்டார்.