தெலங்கானா மாநிலத்தில் இருந்து தொழிலாளர்கள் 1200 பேரை ஏற்றிக் கொண்டு ஜார்க்கண்ட் மாநிலத்துக்குச் சிறப்பு ரயில் புறப்பட்டுச் சென்றது.
கொரோனா பரவலைத் தடுக்க ஊரடங்கு கடைப்பிடிப்பதால் தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளன. போக்குவரத்தும் முடங்கியுள்ளது. இதனால் மாநிலம் விட்டு மாநிலம் சென்ற தொழிலாளர்கள் வருமானம் இழந்து, ஊருக்குத் திரும்பவும் முடியாமல் தவித்து வருகின்றனர்.
இந்நிலையில் தெலங்கானா மாநிலம் லிங்கம்பள்ளியில் இருந்து ஜார்க்கண்ட் மாநிலம் ஹாட்டியாவுக்கு 24 பெட்டிகள் கொண்ட சிறப்பு ரயில் இயக்கப்பட்டுள்ளது. இன்று அதிகாலை 4.50 மணிக்குப் புறப்பட்டுச் சென்ற இந்தச் சிறப்புரயிலில் வெளிமாநிலங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள் 1200 பேர் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். நாடு தழுவிய ஊரடங்குக்குப் பின் பயணிகளுக்காக இயக்கப்படும் முதல் ரயில் இது என்பது குறிப்பிடத் தக்கது.