கர்நாடகத்தில் கொரோனா தனிமைபடுத்தப்பட்ட இடங்கள் தவிர்த்து பிற பகுதிகளில் 4ம் தேதி முதல் ஷாப்பிங் மால்களையும், மதுபான விற்பனை கடைகளையும் திறப்பதற்கு அனுமதியளிக்க அந்த மாநிலத்தை ஆளும் எடியூரப்பா தலைமையிலான அரசு திட்டமிட்டுள்ளது.
பெங்களூரிவில் நேற்று நடைபெற்ற கர்நாடக அமைச்சரவை கூட்டத்துக்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் எடியூரப்பா, தனிமைபடுத்தப்பட்ட பகுதிகள் தவிர்த்து பிற இடங்களில் தொழில்துறை நடவடிக்கைகள், வர்த்தக நடவடிக்கைகளுக்கு 4ம் தேதி முதல் அனுமதியளிக்கப்படும் என்றார். ஊரடங்கு 3ம் தேதிக்கு பிறகு நீடிக்கப்படுமா, இல்லையா என கர்நாடக மக்கள் தெரியாமல் இருந்தனர். எடியூரப்பாவின் அறிவிப்பால் 4ம் தேதி முதல் ஷாப்பிங் மால்கள், மதுபானகடைகளுக்கு மாநில அரசு அனுமதியளிக்க திட்டமிட்டிருப்பது தெரிய வந்துள்ளது.