நாடு முழுவதும் 130 மாவட்டங்கள் சிவப்பு மண்டலத்தில் உள்ளதாகவும், 284 மாவட்டங்கள் ஆரஞ்ச் மண்டலத்தில் உள்ளதாகவும், 319 மாவட்டங்கள் பசுமை மண்டலத்தில் உள்ளதாகவும் மத்திய நலவாழ்வுத்துறை தெரிவித்துள்ளது.
கொரோனாவால் இதுவரை பாதிக்கப்படாத, கடந்த 21 நாட்களாகப் புதிதாக ஒருவர்கூடக் கொரோனாவால் பாதிக்கப்படாத மாவட்டங்கள் பசுமை மண்டலத்தில் சேர்க்கப்பட்டுள்ளன. அதன்படி நாடு முழுவதும் 130 மாவட்டங்கள் சிவப்பு மண்டலத்தில் உள்ளன.
284 மாவட்டங்கள் ஆரஞ்ச் மண்டலத்தில் உள்ளன. 319 மாவட்டங்கள் பசுமை மண்டலத்தில் உள்ளன. அதிக அளவாக உத்தரப்பிரதேசத்தில் 19 மாவட்டங்களும், மகாராஷ்டிரத்தில் 14 மாவட்டங்களும், தமிழ்நாட்டில் 12 மாவட்டங்களும் சிவப்பு மண்டலத்தில் உள்ளன. உத்தரப்பிரதேசத்தில் 36 மாவட்டங்களும், தமிழகத்தில் 24 மாவட்டங்களும் ஆரஞ்ச் மண்டலத்தில் உள்ளன. பசுமை மண்டலத்தில் பல மாநிலங்களும் முன்னணியில் உள்ள நிலையில் தமிழகத்தில் ஒரே ஒரு மாவட்டமே உள்ளது.