மகாராஷ்டிரா மாநிலத்தில் பிளாஸ்மா தெரபி சிகிச்சைக்கு உட்படுத்திக் கொண்ட 53 வயது நபர உயிரிழந்துள்ளார்.
கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்த நபரிடம் இருந்து சேகரிக்கப்பட்ட பிளாஸ்மா, கொரோனாவால் பாதிக்கப்பட்ட இன்னொரு நபரின் உடலில் செலுத்தி சிகிச்சை அளிக்கப்படுவது பிளாஸ்மா தெரபி சிகிச்சையாகும்.
இந்நிலையில், மகாராஷ்டிரா மாநிலத்தில் முதன்முதலில் பிளாஸ்மா தெரபி சிகிச்சைக்கு உட்படுத்திக் கொண்ட நபர் ஒருவர் கடந்த 29ம் தேதி திடீரென உயிரிழந்துள்ளார். மும்பையிலுள்ள மருத்துவமனையில் அவர் சிகிச்சை எடுத்ததாகவும், இந்நிலையில் அவர் உயிரிழந்து விட்டதாகவும் முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.