மதுவை அருந்தினால் தொண்டையில் உள்ள கொரோனா கிருமி அழிந்துபோகும் என்று ராஜஸ்தான் ஆளும்கட்சி எம்.எல்.ஏ பரத்சிங் கூறிய கருத்து சர்ச்சைக்குள்ளாகியுள்ளது.
முதலமைச்சர் அசோக் கெலாட்டுக்கு அவர் எழுதிய கடிதத்தில் கொரோனாவை ஒழிக்க, மூடிய மதுக்கடைகளைத் திறக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.கையில் ஆல்கஹால் கலந்த கிருமி நாசினியை தடவினால் கொரோனாவை அழிக்க முடிகிறது என்றால் மதுவை அருந்தினாலும் கொரோனாவை தொண்டையில் அழிக்க முடியும் என்று தமது கடிதத்தில் அவர் குறிப்பிட்டுள்ளார். கள்ளச்சாராயம் பெருகுவதைத் தடுக்க இது உதவும் என பரத்சிங் விளக்கம் அளித்துள்ளார்.