மகாராஷ்ட்ரா முதலமைச்சர் உத்தவ் தாக்கரேவின் பதவிக்கு சிக்கல் ஏற்பட்ட நிலையில், மேலவைத் தேர்தலை நடத்தக் கோரி தேர்தல் ஆணையத்திற்கு ஆளுநர் கடிதம் எழுதியுள்ளார்.
அரசியல்சாசன விதிப்படி இம்மாதம் 28-ந் தேதிக்குள் அவர் எம்.எல்.ஏ., அல்லது எம்.எல்.சி.யாகத் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். கடந்த 24-ந் தேதி நடைபெறுவதாக இருந்த எம்.எல்.சி. தேர்தல் மூலம் தனது பதவியை தக்கவைத்து கொள்ள உத்தவ் தாக்கரே திட்டமிட்டிருந்த நிலையில், ஊரடங்கு காரணமாக தேர்தல் தள்ளி வைக்கப்பட்டது.
இந்நிலையில், பிரதமர் மோடியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசிய உத்தவ் தாக்கரே இந்த விவகாரத்தில் உதவுமாறும், இல்லையெனில் நெருக்கடியான சூழலில் தாம் ராஜினாமா செய்ய நேரிடும் என்றும் தெரிவித்திருந்தார். இந்நிலையில், மேலவைத் தேர்தலை அறிவிக்குமாறு தேர்தல் ஆணையத்திற்கு ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரி கடிதம் எழுதியுள்ளார். மராட்டிய சட்ட மேலவையில் தற்போது 9 இடங்கள் காலியாக உள்ளன.