ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் தனது பணியாளர்களுக்கு ஊதியக் குறைப்பை அறிவிக்க உள்ளது.
கொரோனாவால் பொருளாதாரப் பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் ஊதியத்தைக் குறைக்கத் திட்டமிட்டுள்ளது.அதன்படி நிறுவனத்தின் தலைவரான முகேஷ் அம்பானி தனது முழு ஊதியத்தையும் விட்டுக்கொடுக்கிறார்.
இயக்குநர்கள், செயல் இயக்குநர்கள், மூத்த நிர்வாகிகள் பெறும் ஊதியத்தில் 30 விழுக்காடு முதல் 50 விழுக்காடு வரை குறைக்கப்பட உள்ளது. ரிலையன்ஸ் நிறுவனத்தின் பெட்ரோலியப் பிரிவில் 15 லட்ச ரூபாய்க்கு மேல் ஊதியம் வாங்கும் ஊழியர்களுக்கு 10 விழுக்காடு குறைக்கப்பட உள்ளது.
15 லட்ச ரூபாய்க்கும் குறைவாக வாங்குபவர்களுக்கு ஊதியக் குறைப்பு இல்லை. ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் இயக்குநர்கள் பங்கேற்கும் கூட்டத்தில் இந்த ஊதியக் குறைப்புத் திட்டத்துக்கு ஒப்புதல் வழங்கப்படும் எனக் கூறப்படுகிறது.