ஊரடங்கால் மத்திய அரசுக்கு பெட்ரோலியப் பொருட்கள் வகையில் 40 ஆயிரம் கோடி ரூபாய் வரி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலகின் மூன்றாவது பெரிய கச்சா எண்ணெய் நுகர்வு நாடான இந்தியாவில் ஊரடங்கால் 130 கோடி மக்கள் வீடுகளுக்குள் முடங்கிய நிலையில் பெரும்பாலான நிறுவனங்களும் இயங்கவில்லை.
இதனால் பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருட்களின் தேவை 80 சதவீதம் அளவுக்கு குறைந்துள்ளது. சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை சரிந்து வரும் நிலையில் உள்ளூர் எண்ணெய் நிறுவனங்களிடம் இருந்து கிடைக்க வேண்டிய வரி வருவாயும் குறைந்துள்ளது. நாட்டின் பட்ஜெட் நிதிவருவாயில் 5 இடத்தில் இருந்த பெட்ரோலியத் துறை வரிவருவாயில் ஏற்பட்டுள்ள சரிவு மத்திய அரசுக்கு பெரும் இழப்பு என கருதப்படுகிறது