மே மாத மத்தியில் பகுதியளவு விமானப் போக்குவரத்துச் சேவைகளைத் தொடக்க ஏர் இந்தியா திட்டமிட்டு வருகிறது.
ஏர் இந்தியா நிறுவனம் அதன் விமானிகளுக்கு ஒரு மின்னஞ்சல் அனுப்பியுள்ளது. அதில் ஊரடங்குக்குப் பின் மே மாத மத்தியில் 25 விழுக்காடு முதல் 30 விழுக்காடு வரையிலான விமானப் போக்குவரத்துச் சேவைகளை இயக்க வாய்ப்புள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது. போக்குவரத்தைத் தொடங்குவதற்காக விமானிகள் தயார் நிலையில் இருக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளது.
விமானிகள் வீட்டுக்கும் விமான நிலையத்துக்கும் சென்றுவருவதற்கான அனுமதிச் சீட்டுகளைப் பெற்றுத் தர ஏற்பாடு செய்யுமாறு செயல் இயக்குநரையும் கேட்டுக்கொண்டுள்ளது.