வங்கி மோசடி வழக்கில் சிக்கி, லண்டன் சிறையில் உள்ள நிரவ் மோடியை நாடு கடத்த கோரும் வழக்கின் இறுதி விசாரணை, வருகிற 11-ந் தேதி தொடங்குகிறது.
இந்தியாவை சேர்ந்த வைர வியாபாரியான நிரவ் மோடி, பஞ்சாப் நேஷனல் வங்கியில் 14 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு மோசடி செய்த வழக்கில், லண்டனில் கைது செய்யப்பட்டார். அடுத்தடுத்து 5 முறை நிரவ் மோடியின் ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், அவரை நாடு கடத்தக்கோரி இந்தியா சார்பில் லண்டன் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இது தொடர்பான வழக்கின் இறுதி விசாரணை வருகிற 11-ந் தேதி தொடங்கி 5 நாட்களுக்கு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கூடுதல் ஆதாரங்களை 4-ம் தேதிக்குள் சமர்ப்பிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.