ட்விட்டரில் பிரதமர் மோடியின் பக்கத்தை (follow- பின்தொடர்தல்) பின்தொடர்வதில் இருந்து அமெரிக்க அதிபரின் வெள்ளை மாளிகை (unfollow)விலகியுள்ளது.
குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி, இந்திய பிரதமர் அலுவலக ட்விட்டர் பக்க கணக்குகளை வெள்ளை மாளிகை கடந்த சில வாரங்களாக பாலோ செய்தது.இது இந்தியா, அமெரிக்கா இடையே நட்புறவு அதிகரித்ததன் அடையாளமாக பார்க்கப்பட்ட நிலையில், அந்த பக்கங்களை வெள்ளை மாளிகை அன் பாலோ செய்துள்ளது.
இதேபோல் அமெரிக்காவுக்கான இந்திய தூதரக அலுவலக ட்விட்டர் பக்கத்தை அன் பாலோ செய்துள்ளது வெள்ளை மாளிகை. வெள்ளை மாளிகையின் ட்விட்டர் பக்க கணக்கை அமெரிக்க அதிபர் மாளிகை அதிகாரிகள் கையாண்டு வருகின்றனர்.
அப்படியிருக்கையில் மோடி உள்ளிட்டோரின் பக்கங்களை வெள்ளை மாளிகை அன் பாலோ செய்ததற்கான காரணம் குறித்து பல்வேறு தரப்பினரும் கேள்வியெழுப்பி வருகின்றனர்.