தெலங்கானாவின் சங்காரெட்டி மாவட்டத்தில் ஊதியத்தை வழங்கவும், சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கவும் கோரிப் போராட்டம் நடத்திய கட்டுமானத் தொழிலாளர்கள் காவல்துறையினர் மீது கல்வீசித் தாக்கியுள்ளனர்.
தெலங்கானாவின் சங்கா ரெட்டி மாவட்டத்தில் ஐஐடி வளாகத்தில் மத்தியப் பிரதேசம், பீகார் உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள் இரண்டாயிரத்து அறுநூறு பேர் தங்கிக் கட்டுமானப் பணியில் ஈடுபட்டு வந்தனர்.
ஊரடங்கால் பணிகள் நிறுத்தப்பட்ட நிலையில், சொந்த ஊருக்கும் செல்ல முடியாமல் சிக்கித் தவித்தனர். மீண்டும் பணிகளைத் தொடங்க அரசு அனுமதி அளித்ததால் கட்டுமான நிறுவனத்தினர் அவர்களைப் பணிக்குத் திரும்பக் கோரினர்.
இதை ஏற்காத தொழிலாளர்கள் ஊதியத்தை உடனடியாக வழங்கவும், சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கவும் கோரிப் போராட்டத்தில் ஈடுபட்டதுடன் அலுவலர்களைத் தாக்கினர்.
இதையடுத்து அங்கு வந்த காவல்துறை வாகனத்தின் மீதும் கல்வீசித் தாக்கியதில் அதிகாரி ஒருவர் காயமடைந்தார்.