டெல்லியில் சிஆர்பிஎஃப் பட்டாலியன் ஒன்றில் கடந்த 2 நாட்களாக கொரோனா வேகமாக பரவுவதால் அதன் 1000 வீரர்களும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
டெல்லி மயூர் விஹாரில் உள்ள இந்த பட்டாலியனில் ஏற்கனவே 47 பேருக்கு தொற்று உறுதியாகி, அவர்களில் 55 வயதான அசாம் வீரர் நேற்று சப்தர்ஜங் மருத்துவமனையில் உயிரிழந்தார். தொற்று உறுதியானவர்கள் டெல்லி மண்டாவாலியில் உள்ள சிறப்பு மருத்துவ முகாமில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
முன்னதாக இந்த பட்டாலியனில் நர்சிங் உதவியாளராக இருக்கும் வீரர் ஒருவருக்கு கடந்த 21 ஆம் தேதி தொற்று உறுதியானது. அதைத் தொடர்ந்து 24 ஆம் தேதி 9 பேருக்கும், அதற்கு அடுத்த நாள் 15 பேருக்கும் தொற்று பரவியது கண்டுபிடிக்கப்பட்டது. தொற்று பரவலை அடுத்து சிஆர்பிஎஃப் முகாம்களில் கிருமி நாசினி தெளித்தல், சானிடைசர் உள்ளிட்ட பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.