மே மாத இறுதிக்குள் இந்தியாவிலேயே கொரோனா பரிசோதனை ஆர்.டி. மற்றும் பிசிஆர் கிட்கள் தயாரிக்கப்படும் என்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ் வர்த்தன் உறுதி தெரிவித்துள்ளார்.
பயோ டெக்னாலஜி துறை தலைவர்கள், இயக்குநர்களுடன் காணொலி காட்சி மூலம் உரையாடிய அவர்,பரிசோதனை கிட்கள் தயாரிக்கும் பணி இறுதிக்கட்டத்தில் இருப்பதாகவும், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் ஒப்புதல் கிடைத்ததும் தயாரிப்பு பணி தொடங்கப்பட்டு விடும் என்றும் குறிப்பிட்டார்.
மே 31ம் தேதிக்குள் நாளொன்றுக்கு 1 லட்சம் பரிசோதனை கிட்கள் தயாரிக்க வேண்டும் என்ற இலக்கை அடைய உதவ முடியும் என கூறிய அவர், நாட்டில் கடந்த 7 நாள்களாக 80 மாவட்டங்களிலும், 14 நாள்களாக 47 மாவட்டங்களிலும், 28 நாள்களாக 17 மாவட்டங்களிலும் புதிதாக யாருக்கும் கொரோனா பாதிப்பில்லை என்றார்.