உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள சிவபெருமானின் 11ஆவது ஜோதிர்லிங்க தலமான புகழ்பெற்ற கேதர்நாத் கோயில் இன்று காலை மீண்டும் நடை திறக்கப்பட்டது.
கடந்த 6 மாதமாக நடை சாத்தப்பட்டிருந்த கேதர்நாத் கோயில் நடை இன்று திட்டமிட்டபடி திறக்கப்பட ஏற்கெனவே ஏற்பாடு செய்யப்பட்டு வந்தது. சுமார் 10 குவிண்டால் மலர்களாலும் வண்ண விளக்குகளாலும் அலங்கரிக்கப்பட்டு தீவிர ஏற்பாடுகள் செய்யப்பட்டு வந்தன.
இந்நிலையில் இன்று அதிகாலை 6.10 மணிக்கு கோயில் நடை மீண்டும் திறக்கப்பட்டு பூஜை நடத்தப்பட்டது. கோயிலின் நடை திறக்கப்பட்டதும் முதல் பூஜையாக பிரதமர் மோடி சார்பில் பூஜைகள் நடத்தப்பட்டன. ஊரடங்கு அமலில் இருப்பதால் பக்தர்களுக்கு அனுமதி இல்லை.