இந்தியா முழுவதும் கொரோனாவுக்கு உயிரிழந்தோரின் எண்ணிக்கை ஆயிரத்தை தாண்டியுள்ளது. இதேபோல் பாதித்தோரின் எண்ணிக்கையும் 31 ஆயிரத்தை கடந்துள்ளது.
நாடு முழுவதும் கொரோனா நோய் பரவாமல் தடுக்க தீவிர நடவடிக்கைகள் ஒருபக்கம் எடுக்கப்பட்டு வரும் நிலையில், மறுபக்கத்தில் அந்நோயால் நாள்தோறும் பாதிப்பு அதிகரித்தபடியே உள்ளது. நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் ஆயிரத்து 897 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருப்பதுடன், மேலும் 73 பேர் உயிரிழந்துள்ளனர். இதேபோல் 24 மணி நேரத்தில் 827 பேர் நோயிலிருந்து குணமடைந்துள்ளனர்.
இதனால் கொரோனா நோயால் பலியானோரின் எண்ணிக்கை இன்று புதிய உச்சத்தை அடைந்தது. கொரோனா பலி எண்ணிக்கை ஆயிரத்தை தாண்டி, ஆயிரத்து 7ஆக உயர்ந்துள்ளது. இதேபோல் கொரோனா தொற்று நோயால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கையும் 31 ஆயிரத்து 332ஆக அதிகரித்துள்ளது.
நாட்டில் 9 மாநிலங்களில் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை ஆயிரத்துக்கும் அதிகமாக உள்ள நிலையில், அதில் மகாராஷ்டிராவில் மட்டும் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 9 ஆயிரத்து 318ஆக உள்ளது. இதற்கடுத்து அதிகபட்சமாக குஜராத்தில் 3 ஆயிரத்து 744 பேரும், டெல்லியில் 3 ஆயிரத்து 314 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
நாடு முழுவதும் கொரோனா நோயில் இருந்து 7 ஆயிரத்து 695 பேர் மருத்துவ சிகிச்சைக்குப் பிறகு குணமடைந்துள்ளனர். இதில் மகாராஷ்டிராவில் மட்டும் அதிகபட்சமாக ஆயிரத்து 388 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.இதுதவிர்த்து, நாடு முழுவதும் மருத்துவமனைகளில் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டு, 22 ஆயிரத்து 629 பேர் சிகிச்சை பெற்று வருவதாக மத்திய சுகாதார அமைச்சக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன
class="twitter-tweet">73 deaths and 1897 new cases in last 24 hours due to #Coronavirus, the sharpest ever increase in death cases in India. https://t.co/5PP3jVpzaj
— ANI (@ANI) April 29, 2020