கொரோனா தாக்கத்தினால் உலக அளவில் பொருளாதாரத்தில் தேக்க நிலை ஏற்பட்டுள்ளதால் ஏர் இந்தியா விமான நிறுவன பங்குகளை தனியாருக்கு விற்கும் திட்டத்தை 2 மாதங்களுக்கு மத்திய அரசு தள்ளி வைத்துள்ளது.
கடனில் மூழ்கிய ஏர் இந்தியா நிறுவனத்தை தனியாருக்கு விற்க முடிவு செய்த மத்திய அரசு, பங்குகளை வாங்க விரும்பும் நிறுவனங்கள் மார்ச் 17ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க கால அவகாசம் வழங்கப்பட்டது. அதன்பின்னர் ஊரடங்கு அறிவிக்கப்பட்டதால் ஏப்ரல் 30 வரை காலஅவகாசம் நீட்டிக்கப்பட்டது. இந்த நிலையில் பங்கு விற்பனைக்கான கால அவகாசம் மேலும் இரண்டு மாதங்களுக்கு நீட்டிக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இதன்படி ஜூன் 30ம் தேதி பங்குகள் விற்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.