நகர்ப்பகுதிகளை போன்று கிராமப்புறங்களுக்கும் அத்தியாவசியப் பொருட்களை கொண்டு சேர்க்க, ஆன்லைன் வணிக சேவையை மத்திய அரசு தொடங்கியுள்ளது.
கொரோனா முன்னெச்சரிக்கையாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு, மக்கள் நடமாட்டம் முடக்கப்பட்டுள்ளதால் கிராமப் பகுதிகளில் அத்தியாவசியப் பொருட்கள் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதை கருத்தில் கொண்டு நகர்ப்புறங்களில் செயல்படும் அமேசான், பிளிப்கார்ட் வகையில், 3 லட்சத்து 80 ஆயிரம் பொதுசேவை மையங்கள் மூலம் அத்தியாவசியப் பொருட்களை கிராமப்புறங்களில் விநியோகிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. ஆன்லைன் மற்றும் ஆப்லைன் மூலம் ஆர்டர் செய்தால் தனியார் அமைப்புகளின் உதவியுடன், வீடுகளுக்கே சென்று பொருட்களை வினியோகிக்கும் திட்டம் சுமார் 2 ஆயிரம் மையங்களில் முதற்கட்டமாக செயல்படுத்தப்பட்டுள்ளதாக மத்திய அரசு அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.