இங்கிலாந்தில் கைது செய்யப்பட்டுள்ள வைர வியாபாரி நிரவ் மோடியின் ஜாமின் மனு, நான்காவது முறையாக தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
மகாராஷ்டிராவில் பஞ்சாப் நேஷனல் வங்கியில் 13 ஆயிரம் கோடி ரூபாய் கடனை பெற்று திருப்பி செலுத்தாமல், இங்கிலாந்துக்கு தப்பிச் சென்ற நிரவ் மோடி கடந்தாண்டு மார்ச் மாதம் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டார்.
இதையடுத்து அவரை நாடு கடத்த வேண்டும் என இந்தியா சார்பில் லண்டன் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்நிலையில், நான்காவது முறையாக அவர் தாக்கல் செய்த ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்த நீதிமன்றம், ஏற்கனவே அறிவித்தபடி மே 11ந் தேதி அவரை நாடு கடத்துவது தொடர்பான வழக்கின் விசாரணை நடைபெறும் எனவும் தெரிவித்துள்ளது.