கர்நாடக அரசு 14 மாவட்டங்களில் ஊரடங்கு விதிகளை தளர்த்தியுள்ளது. சாம்ராஜ்நகர், கொப்பல், சிக்மகளூரு, ராய்ச்சூர், சித்ரகுடா, ராமநகரா, ஹாசன், சிவமொஹா, கோலார், உடுப்பி, தாவணகெரே, குடகு, ஹவேரி, யாட்கிர் ஆகிய 14 மாவட்டங்களில் ஊரடங்கு தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன.
ஊரகப் பகுதிகள், சிறப்பு பொருளாதார மண்டலங்களில் தொழிற்சாலைகள் இயங்க அனுமதி உள்ளிட்ட தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன.
கொரோனா பாதிப்பு எண்ணிக்கை குறைவாக உள்ள, புதிதாக கொரோனா தொற்று ஏற்படாத மாவட்டங்கள் என்ற அடிப்படையில் இந்த தளர்வு அளிக்கப்பட்டுள்ளது.
பெங்களூரு, மைசூரு, தட்சிண கன்னடா உள்ளிட்ட 8 மாவட்டங்களில் ஏற்கெனவே உள்ள கட்டுப்பாடுகளில் எவ்வித தளர்வும் அளிக்கப்படவில்லை.