இந்தியாவுக்கு 11 ஆயிரத்து 385 கோடி ரூபாய் கடன் வழங்க ஆசிய வளர்ச்சி வங்கி ஒப்புதல் அளித்துள்ளது.
கொரோனா பரவலால் பொதுமக்களும் நிறுவனங்களும் பொருளாதாரப் பாதிப்புக்கு ஆளாகியுள்ள நிலையில், மக்களின் இன்னலைக் குறைக்கவும், பொருளாதார மீட்சிக்கும் அரசு பல்வேறு திட்டங்களை அறிவித்து வருகிறது.
இந்நிலையில் இந்திய அரசுக்கு 11ஆயிரத்து 385 கோடி ரூபாய் கடன் வழங்கப் பிலிப்பைன்ஸ் நாட்டின் தலைநகர் மணிலாவில் உள்ள ஆசிய வளர்ச்சி வங்கி ஒப்புதல் அளித்துள்ளது.
கொரோனா கட்டுப்பாடு, தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை, பொருளாதாரத்தில் பின்தங்கிய ஏழைகளின் சமூகப் பாதுகாப்பு ஆகியவற்றுக்குச் செலவிடுவதற்காக இந்தக் கடனை வழங்குவதாக ஆசிய வளர்ச்சி வங்கி தெரிவித்துள்ளது.