5ஜி சேவைக்கு தயாராகி வரும் ஏர்டெல் தொலைத் தொடர்பு நிறுவனம், தனது நெட்வொர்க் திறனை அதிகரிக்கும் நோக்கில் பின்லாந்து நிறுவனமான நோக்கியாவுடன் தொழில் நுட்ப ஒப்பந்தம் ஒன்றை செய்து கொண்டுள்ளது.
சுமார் 7,636 கோடி ரூபாய் மதிப்பிலான இந்த ஒப்பந்தத்தின்படி, நாடு முழுவதும், ஏர்டெல்லுக்காக, இரண்டு ஆண்டுகளுக்குள் 3 லட்சம் புதிய ரேடியோ யூனிட்டுகளை, நோக்கியா அமைத்து கொடுக்கும் என கூறப்படுகிறது.
வருங்கால தொலைத் தொடர்பு தேவைகளை ஈடுகட்டவும், உலகின் மிகப்பெரிய தொலைத்தொடர்பு சந்தையான இந்தியாவில் தனது இருப்பை உறுதி செய்யவும் இந்த ஒப்பந்தம் உதவும் என நோக்கியா நம்பிக்கை தெரிவித்துள்ளது.