உத்தரப் பிரதேச மாநிலத்தில் 2 சாதுக்கள் நேற்றிரவு கொலை செய்யப்பட்டுள்ள நிலையில், அச்சம்பவம் தொடர்பாக இளைஞர் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
மகாராஷ்டிர மாநிலம் பால்கரில் 2 சாதுக்கள் கொல்லப்பட்ட சம்பவத்தின் பரபரப்பு அடங்குவதற்குள், உத்தரப் பிரதேச மாநிலம் புலந்த்சாகர் மாவட்டம் பகோனா கிராமத்தில் 2 சாதுக்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
பொருள் திருட்டு தொடர்பாக 2 நாள்களுக்கு முன்பு இளைஞர் மீது குற்றச்சாட்டு தெரிவித்த சாதுக்களை அந்த இளைஞர் நேற்று இரவு கொலை செய்துள்ளார்.
இதுகுறித்து விசாரணை நடத்தி, அண்டை கிராமத்தில் பதுங்கியிருந்த இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி விரிவான அறிக்கையை தாக்கல் செய்யும்படி அதிகாரிகளுக்கு முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார்.