தெலங்கானாவில் 60 விழுக்காட்டுக்கும் மேற்பட்ட பகுதிகள் கொரோனா இல்லாதவையாக மாறியுள்ளதாக மாநில முதலமைச்சர் சந்திர சேகர ராவ் தெரிவித்துள்ளார்.
தெலங்கானா மாநிலத்தில் கொரோனா வைரசால் ஆயிரத்து மூன்று பேர் பாதிக்கப்பட்ட நிலையில், அவர்களில் 280 பேர் முழுமையாகக் குணமடைந்துள்ளனர். 26 பேர் உயிரிழந்தனர்.
இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் சந்திரசேகர ராவ், 33 மாவட்டங்களைக் கொண்ட தெலங்கானாவில் 21 மாவட்டங்களில் கொரோனா நோயாளிகள் இல்லை எனத் தெரிவித்தார்.
புதிதாகப் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கையும், கட்டுப்பாட்டு மண்டலங்களும் குறைந்து வருவதாகவும் அவர் தெரிவித்தார். இருப்பினும் மே ஏழாம் தேதிக்குள் ஊரடங்கு தளர்த்தப்படாது என்றும் அவர் குறிப்பிட்டார்.
தெலங்கானாவில் திங்கட்கிழமை புதிதாக இருவருக்கு மட்டுமே கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இது கடந்த நாற்பது நாட்களில் மிகக் குறைந்த அளவாகும்.