டெல்லியில் கொரோனாவில் இருந்து குணமடைந்த 25 பேர் ரத்த பிளாஸ்மாவை தானம் செய்தனர்.
ரத்தத்தில் உள்ள திரவ மூலக்கூறான பிளாஸ்மா, ரத்த செல்களை சமநிலையில் வைத்திருக்க உதவுகிறது. கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் பிளாஸ்மாவில் ஆன்டிபாடிஸ் எனப்படும் எதிர்ப்பு மூலக்கூறு உருவாகியிருக்கும் என்றும் அதனை பாதிக்கப்பட்டவரின் உடலில் செலுத்தி குணமடையச் செய்ய வாய்ப்புள்ளதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் டெல்லி நரேலா பகுதியில் உள்ள பிளாஸ்மா தான மையத்தில் 25 பேர் பிளாஸ்மா தானம் செய்தனர். டெல்லி சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் அதனை நேரில் பார்வையிட்டார்.