இன்றியமையாப் பொருட்கள் அல்லாதவற்றையும் இணைய வழியாக விற்க அனுமதிக்கும்படி அமேசான், பிளிப்கார்ட் ஆகிய நிறுவனங்கள் அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளன.
கொரோனா பரவலைத் தடுக்க ஊரடங்கு கடைப்பிடிக்கும் நிலையில், உணவு, மருந்து, மருத்துவக் கருவிகள் ஆகியவற்றை இணையத்தளம் வழியாக ஆர்டர் பெற்று வாடிக்கையாளர்களின் இல்லங்களில் நேரடியாக வழங்க நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
அதேநேரத்தில் செல்பேசிகள், மின்னணுக் கருவிகள், துணிகள், வீட்டுப் பயன்பாட்டுப் பொருட்கள் ஆகியவற்றை விற்பதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அனைத்துப் பொருட்களையும் இணையவழியாக விற்க அனுமதி வழங்க வேண்டும் என அமேசான், பிளிப்கார்ட் ஆகிய நிறுவனங்கள் அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளன.
சமூக விலகலைக் கடைப்பிடித்துப் பாதுகாப்பாகப் பொருட்களை வழங்க முடியும் என்றும் அந்த நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.