கொரோனா தடுப்பூசிக்கான பரிசோதனை இந்தியாவில் மே மாதத்தில் தொடங்க வாய்ப்புள்ளதாக, புனேவை சேர்ந்த சீரம் இன்ஸ்டியூட் தெரிவித்துள்ளது.
மனிதர்கள் மீது நடத்தப்படும் இந்த பரிசோதனை வெற்றிபெறும் பட்சத்தில், தடுப்பு மருந்து செப்டம்பர், அக்டோபரில் பயன்பாட்டுக்கு வர வாய்ப்புள்ளது என சீரம் இன்ஸ்டியூட் சிஇஓ அடார் பூனாவாலா (Adar Poonawalla) தெரிவித்துள்ளார்.
பிரிட்டன் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் தடுப்பூசி பரிசோதனை செப்டம்பரில் முடியும் வரை காத்திருக்கப் போவதில்லை என்றும், இந்தியாவில் அதேதடுப்பு மருந்தை மனிதர்கள் மீது பரிசோதிக்க உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
இந்த சோதனை வெற்றிபெறும் பட்சத்தில் மாதத்திற்கு 40 முதல் 50 லட்சம் டோஸ்களை தயாரிக்க திட்டமிட்டுள்ளதாகவும், 6 மாதங்களுக்குப் பிறகு இந்த அளவை படிப்படியாக அதிகரிக்க உள்ளதாகவும் சீரம் இன்ஸ்டியூட் சிஇஓ தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் தடுப்பு மருந்தை சுமார் ஆயிரம் ரூபாய் என்ற கட்டுப்படியாகக் கூடிய விலையில் விற்கத் திட்டமிட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
class="twitter-tweet">We'll start manufacturing on great personal cost and risk, so that we get a headstart on a vaccine, that MAY work. #COVIDー19 https://t.co/RbMe3EomTk
— Adar Poonawalla (@adarpoonawalla) April 22, 2020