ஆந்திர மாநிலத்தில் ஆளுநர் அலுவலக ஊழியர்கள் 4 பேருக்கு கொரோனா வைரஸ்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. விஜயவாடாவில் ஏற்கனவே 100-க்கும் மேற்பட்டோருக்கு நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளதால், அப்பகுதி முழுவதும் கொரோனா ஹாட்ஸ்பாட் பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அங்குள்ள ஆளுநர் மாளிகையில் பணியாற்றும் பாதுகாப்பு அதிகாரி, செவிலியர் உட்பட 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இதையடுத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ட்ரோன் மூலம், ஆளுநர் மாளிகை முழுவதும் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது
class="twitter-tweet">#AndhraPradesh - 4 people from Governor‘s office test positive for #Covid_19. One of them is the Chief Security Officer. They were all tested as a precautionary measure since they come in contact with the Governor #APFightsCorona
— Ayushman Jamwal (@Jamwalthefirst) April 26, 2020