நெட்பிளக்சின் இணையத் தொடரை தடை செய்யக் கோரி வழக்கறிஞர் ஒருவர் தாக்கல் செய்த மனு டெல்லி உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு ஏற்கப்பட்டுள்ளது.
சட்டத்துறையினர் குறித்து அவதூறு பரப்பும் விதமாக ஹன்ஸ்முக் என்ற தொடரின் 4 அத்தியாயங்களைத் தடைசெய்யுமாறு மனுதாரர் அசுதோஷ் துபே கோரியுள்ளார். வழக்கறிஞர்களை குறித்தும் உத்தரப்பிரதேச அரசியல் தலைவர்கள் குறித்தும் இந்த தொடரில் தவறான கருத்து பரப்பப்படுவதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார். பல லட்சம் பேர் பார்க்கும் இணையத் தொடர்களில் வழக்கறிஞர்களின் தொழிலுக்கு பாதிப்பு ஏற்படும் என்றும் அவர் தமது மனுவில் அச்சம் தெரிவித்துள்ளார்.