பொதுமக்களுக்கு விநியோகிக்க அடுத்த ஓராண்டிற்கு தேவைப்படும் உணவு தானியங்கள் கையிருப்பில் உள்ளதாக, இந்திய உணவுக் கழகத் தலைவர் டி.வி.பிரசாத் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கொரோனாவால் தற்போது நிலவும் நெருக்கடியான சூழலை சமாளிக்கும் வகையில் உணவு தானிய இருப்பு திட்டமிடப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த வகையில் 2021-ம் ஆண்டு மார்ச் வரை உணவுப் பொருட்கள் தேவையைச் சமாளிக்கும் அளவிற்கு, 284 லட்சம் டன் அரிசியும், 280 லட்சம் டன் கோதுமையும் இருப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், தேவைக்கு அதிகமாக இருப்பு வைக்கப்பட்டு இருப்பதாக சில தவறான செய்திகள் வெளியாவதாகவும் தெரிவித்துள்ளார்.