ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், சாலை மார்க்கமாக சுமார் 2 ஆயிரம் கிலோ மீட்டர் தூரம் கார்களில் பயணித்து 2 நீதிபதிகள், தலைமை நீதிபதிகளாக பதவியேற்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கொல்கத்தா உயர்நீதிமன்ற நீதிபதி தீபாங்கர் தத்தா, மும்பை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாகவும், அலாகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதி விஸ்வநாத் சோமத்தர், மேகாலயா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாகவும் குடியரசுத் தலைவரால் அண்மையில் நியமிக்கப்பட்டனர்.
தற்போது ஊரடங்கு அமலில் இருப்பதால், மாநிலங்களுக்கு இடையே ரயில் மற்றும் விமான போக்குவரத்து தடைபட்டுள்ளது. இருப்பினும் அவர்கள் 2 பேரும் சாலை மார்க்கமாக 2 ஆயிரம் கிலோ மீட்டர் தூரத்துக்கும் அதிகமாக கார்களில் பயணித்து மும்பை மற்றும் மேகாலயா மாநில உயர்நீதிமன்றங்களின் தலைமை நீதிபதிகளாக பதவியேற்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.